Monday, April 27, 2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அருள் மறைக்குர்ஆன் - 114 (விளக்கம்)

(நான் புரிந்துக் கொண்ட திருமறைக் குர்ஆனின் விளக்கத்தை இங்கு கொடுத்துள்ளேன் இதில் ஏதேனும் தவறு இருப்பின் திருத்தம் தரவும். வல்ல நாயன் நம் அனைவருக்கும் நற்கிருபை புரிவானாக. - அபு ஹஸிப்.)


அருள் மறைக் குர்ஆன் - அத்தியாயம் - 114 ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)




114:1 (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.




114:2 (அவனே) மனிதர்களின் அரசன்;


114:3 (அவனே) மனிதர்களின் நாயன்.



114:4 பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).




114:5 அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.




114:6 (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.




விளக்கம்:
சிந்தித்து செயல்படும் இரண்டு இனங்கள் மனிதர்கள் மற்றும் ஜின்கள் ஆவார்கள்.  இவர்களில் மனிதர்கள் (களி)மண்ணாலும், ஜின்கள் நெருப்பாலும் படைக்கப்பட்டவர்கள்.  இவர்களுக்கு தீங்கு இழைப்பவர்கள் இவர்களிடமே இருப்பதால், அவர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து பாதுகாவல் தேடுவதற்கான வழிகாட்டுதல் ஆகும்.

நட்பாக பழகி உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுபவர்கள் பலர்.

Tuesday, August 11, 2009

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே

அன்புடையீர்!!!  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

உங்களின் வரவு நல்வரவாகட்டும்.

வளைத்தளம் ஆரம்பிக்க ஆவல் கொண்டேன்,
அதன் விளைவே இத்தளம்.

நல்லதை நாடுவோம் - நாமெல்லாம்
அதன் பொருட்டு அல்லாஹ் நாடுவான் - நமக்கெல்லாம்
ஒரு வெகுமதி.

தொடர்ந்து சந்திப்போம் -  அல்லாஹ் நாடினால்

அபு ஹஸிப்.